பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். 

அதைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) 22-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 

24-ம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கும், 

25-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. 

பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.